திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை சம்பவம்-டிக்காராமின் மனைவி பணத்தை எடுத்துச் செல்லும் சிசிடிவி

0 3223

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில், டிக்கெட் கவுண்டர் ஊழியர் டிக்காராமின் மனைவி பணத்தை மறைத்து எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தன்னை கட்டிப்போட்டு மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக, ரயில் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த ஊழியர் டிக்காராம் புகாரளித்த நிலையில், விசாரணையின் அந்த புகார் பொய் என்றும், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால், மனைவியுடன் சேர்ந்து திட்டமிட்டு பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில், டிக்காராமின் மனைவி சரஸ்வதி அதிகாலை 4 மணியளவில் திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்துக்கு உள்ளே வருவதும் பின்னர் ஒரு மணிநேரம் கழித்து சரியாக 5 மணிக்கு வெளியே செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் சிவப்பு நிற சட்டையும் நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்துகொண்டு தலையில் சால்வையால் முக்காடு போட்டுக்கொண்டு முன்பக்கமாக பணத்தை மறைத்து எடுத்துச் செல்வதும் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments