தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த ரோடு ரோலர்.. சிவகங்கையில் பரபரப்பு..!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை போடும் பணியில் ஈடுபட்டிருந்த ரோடு ரோலர் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தேவகோட்டை அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவிடுதிகோட்டை என்ற இடத்தில் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரோடு ரோலர் வாகனத்தில், பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது. உடனடியாக ஓட்டுநர் கீழே இறங்கிய நிலையில், தீ மளமளவென பறவி வாகனம் முழுவது தீக்கிரையானது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
Comments