ஒரு மாதமாக நடைபெற்ற "ஆபரேஷன் கஞ்சா வேட்டை".. அதிரடி நடவடிக்கையில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது.!

0 2477

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற "ஆபரேஷன் கஞ்சா வேட்டை" மூலம் சுமார் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 23 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் சட்டவிரோத புகையிலை மற்றும் குட்கா கடத்தல் தொடர்பாக 7,708 பேர் கைது செய்யப்பட்டு, 40 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments