நண்பன் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை?

0 4645

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் அருகே நண்பன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோட்டைமா நகர் பகுதியில் வசித்து வரும் பாசூரனின் மகன் மில்டனும் , புளியமங்கலம் பகுதியை சேர்ந்த உதயகுமாரும் 11ஆம் வகுப்பு படிக்கும்போதில் இருந்து நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக உதயகுமார் கடந்த நவம்பர் 5ஆம் தேதி உயிரிழந்த நிலையில், அப்போதிலிருந்து மில்டன் மன வருத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

நண்பணின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் சில தினங்களுக்கு முன் மில்டன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், உதயகுமார் இறந்து போன 5ஆம் தேதியில் உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்து இன்று அதிகாலையில் மில்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments