ஒரே பைக்கில் அதிவேகமாக சென்ற 11ஆம் வகுப்பு படிக்கும் 3 பள்ளி மாணவர்கள் மரத்தில் மோதி உயிரிழப்பு

0 4080

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஒரே பைக்கில் அதிவேகமாகச் சென்ற 11ஆம் வகுப்பு  மாணவர்கள் 3 பேர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

ஓட்டுநர் உரிமம் பெறாத 16 வயதே ஆன பெனிஸ், ஸ்டெபின், முல்லப்பன் என்ற அந்த மாணவர்கள் தலைக்கவசம் அணியாமல் ஓட்டிச் சென்ற பைக் வளையலை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இறந்த மாணவர்களின் உடல்கள்  பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments