துப்பாக்கி முனையில் கொள்ளை.. குற்றவாளிகளை விரைந்து பிடித்த தமிழக ரயில்வே போலீசாருக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு பாராட்டு

0 1614

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுண்ட்டரில் துப்பாக்கி முனையில் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனதாக நாடகமாடிய டிக்கெட் விற்பனையாளர் மற்றும் அவரது மனைவியை விரைந்து கைது செய்த தமிழக ரயில்வே போலீசாரை டி.ஜி.பி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டினார்.

கடந்த 3 ஆம் தேதி திருவான்மியூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் தன்னை கட்டிப்போட்டு மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக டிக்கெட் விற்பனையாளர் டீக்கா ராம் மீனா நாடகமாடினான்.

போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளை நாடகத்துக்கு உடந்தையாக அவனது மனைவியும் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் சிறப்பாக விசாரணை நடத்திய காவலர்களுக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு பண வெகுமதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments