இலங்கைச் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 13 பேர் விடுதலை.!

0 2009

இலங்கைச் சிறையில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதரகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தைச்சேர்ந்த 13 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் என்பதை மன்னாரில் உள்ள எமது வழக்கறிஞர் ஊடாக அறிந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம் எனக் குறிப்பிட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து டிசம்பர் 19ஆம் நாள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களைக் கைது செய்த இலங்கைக் கடற்படையினர் வவுனியா சிறையில் அடைத்தனர்.

இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கை இன்று விசாரித்த மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் நிபந்தனைகளுடன் மீனவர்களை விடுவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments