பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை.. பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

0 2278

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில்  ஜெய்ஷ் இ முகமது  அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சந்த்காம் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் போலீசாரும் இணைந்து  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்த்காம் என்ற பகுதியில்  பயங்கரவாதிகள் சிலர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு பாதுகாப்புப்படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தி வருகின்றனர்.

இதில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி உட்பட 3 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதுடன் அவர்களிடமிருந்து  துப்பாக்கிகள், வெடி பொருட்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments