பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து ஆய்விற்கு ஒப்புதல்

0 2501

பாரத் பயோ டெக் நிறுவனத்தின் மூக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை மூன்றாம் கட்ட உயர் ஆய்வு செய்யவும், அதை பூஸ்டர் டோசாகப் பயன்படுத்துவது பற்றி ஆய்வு செய்யவும் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரின் வல்லுநர் குழு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கின் வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்து அதை இரண்டு தவணைத் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆட்களுக்குச் செலுத்திச் சோதித்துப் பார்க்கத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்திருந்தது.

இந்நிலையில் சோதனைகளை நடத்த பாரத் பயோடெக் நிறுவனத்துக்குக் கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒப்புதலுக்கான நெறிமுறைகளை வழங்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments