இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 58,097 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு இன்று 58 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 58 ஆயிரத்து 97 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும், நோய் தொற்றுக்கு மேலும் 534 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 389 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 2.14 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 4.18 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 135 ஆக அதிகரித்துள்ளது.
Comments