300 ரூபாய் டிக்கெட் 3,000 ரூபாய்... திருப்பதியில் போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்து வந்த 7 பேர் கைது

0 2235

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த 7 பக்தர்களின் டிக்கெட்டுகளை ஆய்வு செய்தபோது, அது போலியானது எனத்தெரியவந்தது. விசாரணையில் , 21 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு போலி டிக்கெட்டுகளை விற்றது தெரியவந்தது.

இது குறித்து விஜிலென்ஸ் அதிகாரிகளின் விசாரணையில், சிறப்பு அதிரடிப்படை காவலர் உள்பட, 7 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து 7 பேரும் கைது செய்யப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments