புத்தாண்டில் தடையை மீறி இருசக்கர வாகனத்தில் வீலிங்.. இருவர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசாரால் கைது

0 1411

சென்னையில், புத்தாண்டு இரவில் தடையை மீறி ஈ.சி.ஆரில் இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்து பயணம் மேற்கொண்ட மேலும் இருவரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

வெட்டுவாங்கேணி செயின்ட் ஜோசப் பள்ளி எதிரே உள்ள சாலையில் இளைஞர்கள் இருசக்கரவாகனத்தில் அதிவேகமாகவும், சாகசத்திலும் ஈடுபட்டனர்.

இந்த வாகனங்களின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரித்த காவல்துறையினர், சோழிங்கநல்லூரை சேர்ந்த தியாகராஜன் மற்றும் ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த முத்துக்குமார் ஆகிய இருவரைக் கைது செய்து அவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments