மந்தையின் காவல் யானையுடன் மோதிய வழிப்போக்கன் யானை!

0 1813

தென் ஆப்பிரிக்காவின் வனப்பகுதியில் இரு யானைகள் மோதிக் கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது.

தேசியப் பூங்காவில் சில சுற்றுலா பயணிகள் யானைகளைப் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த மந்தையில் பெரிய ஆண் யானையும், சில ஆண் மற்றும் பெண் யானைகள் இருந்தன. இந்நிலையில் அங்கு வந்த மற்றொரு ஆண் யானை, மந்தையின் காவல் யானை மீது தாக்குதல் நடத்தியது.

இரு யானைகளும் தந்தங்களால் முட்டிக் கொண்டு ஆக்ரோஷமாகச் சண்டையிட்டன. யானைகள் சண்டையின் போது அருகில் இருந்த சிறு மரங்கள் முறிந்து விழுந்தன.

சுமார் 10 நிமிடங்கள் நடந்த சண்டைக்குப் பிறகு வெற்றி, தோல்வியின்றி இரு யானைகளும் அங்கிருந்து அகன்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments