2000 பயணிகளுடன் கோவாவில் இருந்து மும்பைக்கு வந்த கப்பல்லில் 66 பயணிகளுக்கு கொரோனா.. சொகுசு கப்பல் சிறைப்பிடிப்பு.!

0 1544

கொரோனா பாதிப்புடைய 66 பேரை கொண்ட கப்பல், கோவாவில் இருந்து மும்பையின் தெற்கு பல்லார்ட் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.

இதையடுத்து போலீசார் அந்த கப்பலை சூழ்ந்து பயணிகள் யாரும் வெளியேறாத வகையில் சிறை வைத்தனர். அங்குள்ள பயணிகளுக்கு மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் பரிசோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நெகட்டிவ் சான்று உள்ள பயணிகள் மட்டுமே வீட்டில் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள ஒப்புக் கொண்டால் கப்பலை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

17 இருக்கைகள் கொண்ட 5 ஆம்புலன்சுகள் பாதிக்கப்பட்ட பயணிகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பயணிகள் தங்கள் சொந்த செலவில் ஓட்டல்களில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 2 ஆயிரம் பேருடன் வந்துள்ள அந்தக் கப்பலில் இதுவரை 66 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments