தமிழகத்தில் மேலும் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் தினசரி கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரத்து 728-இல் இருந்து 2 ஆயிரத்து 731-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோயாளிகள் 674 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 2 ஆயிரத்து 731 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 55 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளதாகவும், சென்னையில் அதிகபட்சமாக ஆயிரத்து 489 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 6 ஆயிரத்து 370ஆக உயர்ந்துள்ளது என்றும், கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments