இறந்த பாம்பை சாலையில் வீசியதால் விபரீதம் ; ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளான பேருந்து

0 4455
சாலையின் எதிர்திசையில் சென்ற ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளான பேருந்து

விழுப்புரம் அருகே இறந்துபோன பாம்பைத் தூக்கி நெடுஞ்சாலையில் வீசிய சிறுவர்களின் விளையாட்டுத்தனத்தால், அரசுப் பேருந்து ஒன்றும் ஆட்டோ ஒன்றும் விபத்துக்குள்ளானது.

சென்னையிலிருந்து ராட்சத இரும்பு உருளைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் அடுத்த பேரங்கியூர் அருகே சிறுவர்கள் சிலர் இறந்துபோன பாம்பைத் தூக்கி லாரி முன்பு வீசினர் என்று கூறப்படுகிறது.

திடீரென லாரி முன்பு விழுந்த பாம்பைக் கண்ட ஓட்டுநர் பதற்றமாகி சட்டென பிரேக்கை அழுத்தி இருக்கிறார். இதில் லாரியில் இருந்த இரும்பு உருளை ஒன்று கீழே விழுந்துள்ளது.

அப்போது லாரியின் பின்னால் வேகமாக வந்துகொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்றின் சக்கரம் அந்த உருளையின் மீது ஏறியதில் நிலைதடுமாறிய பேருந்து, சாலையின் எதிர்பக்கமாகச் சென்று, அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்றின் மீது மோதி, சாலையோர இரும்புத் தடுப்பில் மோதி நின்றது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரும் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோரும் லேசாகக் காயமடைந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments