குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார் அமைச்சர் ரகுபதி.!

0 2703

புதுக்கோட்டை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது குண்டு பாய்ந்து உயிரிழந்த 11 வயது சிறுவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் நிவாரண நிதிக்கான காசோலையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சிறுவனின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் சிறுவன் புகழேந்தியின் உடல் அவனது சொந்த ஊரான கொத்தமங்கலம் பட்டிக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

சிறுவனின் உடலுக்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை புகழேந்தியின் பெற்றோரிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments