போதையில் இருசக்கர வாகனம் ஓட்டிவந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் மீது வழக்குப் பதிவு

0 2298
காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் மீது வழக்குப் பதிவு

விழுப்புரத்தில் குடித்துவிட்டு இருசக்கர வாகனம் ஓட்டிவந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெளி கிராமத்தைச் சேர்ந்த ஆல்ரின் ரிமோஸ் பிரிட்டோ என்பவர் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இவர் தனது நண்பருடன் விழுப்புரம் காந்தி சிலை வழியாக தலைக்கவசம் அணியாமல், மது போதையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் இருவரையும் மடக்கி, வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஆல்ரின் ரிமோஸ் பிரிட்டோ போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments