சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து ; கார் முழுவதும் எரிந்து நாசம்

0 2049
சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீர் தீவிபத்து

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. குன்னூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த தர்மராஜ் குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றுவிட்டு அவரது renault duster காரில் குன்னூர் நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.

அப்போது, மரப்பாலம் அருகே சென்ற போது காரின் முன்பக்கம் புகை வந்ததால், சுதாரித்த தர்மராஜ் வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் வெளியேறியதாக கூறப்படும் நிலையில், புகை அதிகரித்து கார் முழுவதும் தீப்பற்றி, கொளுந்துவிட்டு எரிந்தது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீவிபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments