தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வெழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு

0 3500
தமிழ் வழியில் பாடம் கற்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டும் என தமிழக அரசின் தேர்வுத்துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது.

அதே சமயம் தமிழ் வழியில் பாடம் கற்ற மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் MBC, SC, SCA, SS, ST பிரிவு மாணவர்களுக்கும் தேர்வுகட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments