பொங்கல் சிறப்பு தொகுப்பு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் மேடையில் தேம்பி அழுத அமைச்சர்.!

0 4804

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மேடையில் பேசும்போது தன் மனைவியின் இறப்பை நினைத்து தேம்பி அழுதார்.

அமைச்சரின் மனைவி இறந்த பிறகு சொந்த கிராமமான கழுதூரில் நடக்கும் முதல் நிகழ்ச்சி என்பதால், அங்கு கூடியிருந்தவர்கள் மற்றும் உறவினர்களை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு அவர் கண் கலங்கினார்.

மனைவியை இழந்த துக்கத்தில் கண் கலங்கிய அமைச்சரை அருகில் இருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தியதை தொடர்ந்து, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments