அமெரிக்காவில் ஒரே நாளில் 10.42 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி

0 2436

அமெரிக்காவில் முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்புகள் 10 லட்சத்தை கடந்துள்ளன. அமெரிக்காவில், இதற்கு முன் ஏற்பட்ட கொரோனா அலைகளைக் காட்டிலும், ஒமைக்ரான் பாதிப்பால் கொரோனா பரவல் மும்மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை 5 லட்சத்து 91 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதே தினசரி பாதிப்பின் உச்சமாகக் கருதப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments