போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 1858 இருசக்கர வாகனங்கள் ஏலம்

0 2409
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 1858 இருசக்கர வாகனங்கள் ஏலம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, உரிமை கோரப்படாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கான ஏலம் மாவட்ட அயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற நிலையில், ஏலத்தில் பங்கேற்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் களவாடப்பட்டும், குற்ற செயல்களுக்குப் பயன்படுத்தியதாலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றில் 1858 இருசக்கர வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளதால் ஏலம் விடப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று நடைபெற்ற ஏலத்தில் 4000 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஒரு வாகனம் ஏலம் போன நிலையில், வாகனங்களை ஏலம் எடுக்க ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டதால் போலீசார் கூட்டத்தை சரிசெய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments