இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியதில் 2 பேர் பலி.!

0 1626

இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

ஹைஃபா துறைமுக நகரம் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த பேன்தர் வகை கடல் கண்காணிப்பு ஹெலிகாப்டர், திடீரென விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியதில் 2 பைலட்டுகள் உயிரிழந்தனர்.

மூன்றாவது பைலட் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

இந்த விபத்து குறித்து இஸ்ரேல் விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், பயிற்சி ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களை பயன்படுத்த தற்காலிக தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments