உதவி பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு - தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அப்பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.
விழுப்புரம், நீலகிரி மண்டல மையங்களில் உள்ள உறுப்பு கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியர்கள் மற்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதற்கான கால அவகாசம் நேற்றோடு முடிவடைந்த நிலையில், நிர்வாக காரணங்களால் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments