நிறுத்தத்தில் பேருந்து நிற்காததால்.. பேருந்திலிருந்து குதித்த மாணவி பலி..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பேருந்தில் இருந்து கீழே குதித்த 12-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சினிகிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகள் நவ்யா ஸ்ரீ கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை கெலமங்கலத்திலிருந்து தருமபுரி நோக்கி வந்த அரசு பேருந்தில் மாணவி வந்த நிலையில், சினிகிரிப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் பதற்றமடைந்த மாணவி பேருந்தில் இருந்து கீழே குதித்த நிலையில், பலத்த காயங்களுடன் அந்த மாணவி ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார்.
Comments