கோவை விமான நிலையத்திற்கு துருப்பிடித்த துப்பாக்கியுடன் வந்த கேரளா காங்கிரஸ் பிரமுகரிடம் போலீசார் தீவிர விசாரணை.!

0 1871

கோவை விமான நிலையத்திற்கு துருப்பிடித்த துப்பாக்கியுடன் வந்த கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளா காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக உள்ள கே.எஸ்.பி.ஏ. தங்கல், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்வதற்காக பாலக்காட்டில் இருந்து கோவை விமான நிலையம் வந்துள்ளார்.

அவரது உடமைகளை சோதனை செய்தபோது அதில் ஒரு துருப்பிடித்த கைத்துப்பாக்கியும், ஏழு தோட்டாக்களும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் அந்த நபரை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் கோவை பீளமேடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கைதுப்பாக்கிக்கு லைசன்ஸ் உள்ளதா ? எதற்காக விமானத்தில் துப்பாக்கியை கொண்டு செல்ல முயன்றார் என விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments