தமிழகத்தில் ஜன.6-ந் தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 20553

தமிழகத்தின் சில மாவட்டங்களில் வருகிற 6-ந் தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4,5ஆகிய இரு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், 6-ந் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், 7, 8ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலையே நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்த கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments