மத்திய பிரதேசத்தில் அரசு மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்த நாய்..!

0 2169

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள Kamala Raja அரசு மருத்துவமனையின் நோயாளிகள் வார்டு படுக்கையில், நாய் ஒன்று படுத்திருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளும் அவர்களை கவனிக்க வந்தவர்களும் தரையில் அமர்ந்திருக்க, படுக்கையின் மேல் நாய் படுத்திருந்த சம்பவம் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துயுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவியதையடுத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments