கல்லூரி மாணவியின் உயிரை பறித்த கட்டாய திருமணம்..! மாணவிகள் கேலி என போலீஸில் தகவல்

0 6245

கல்லூரியில் படிக்கும் போது திருமணம் செய்து கொண்ட மாணவியை, சக மாணவிகள் கிண்டல் செய்ததால் மனவேதனைக்குள்ளான அவர் உயிரை மாய்த்துக் கொண்ட விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது. படிக்கும் மாணவிக்கு குடும்பத்தினர் நடந்தி வைத்த கட்டாய திருமணத்தால் ஏற்பட்ட சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை வியாசர்பாடி, எஸ்.எம்.நகரை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ரோனிஷா. இவருக்கும் , ஆவடி அடுத்த சேக்காடு டிரைவர்ஸ் காலனியை சேர்ந்த உறவுக்கார இளைஞர் அகிலன் என்பவருக்கும், கடந்த 3மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ரோனிஷா அண்ணாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம் 2 ஆம் ஆண்டு படித்து வந்த நிலையில் தற்போது திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார். ஆனால் அதனை மீறி உறவுக்கார இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்கு பிறகு, கணவர் வீட்டில் வசித்துக் கொண்டே , கல்லூரிக்கு சென்று வந்த ரோனிஷா சம்பவத்தன்று வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.

தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சடலத்தை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில், ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

படிப்பு முடிந்த பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ரோனிஷா தெரிவித்த நிலையில், பெற்றோர்கள் கட்டாயத்தின் பேரில் இந்த திருமணம் நடந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே ரோனிஷாவிற்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்றும் இதனால், திருமணமான நாள் முதலே அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் திருமணத்திற்கு பிறகு, கல்லூரிக்கு செல்லும் போது தன்னுடன் படிக்கின்ற தோழிகள் திருமண வாழக்கை குறித்து பேசி கேலி, கிண்டல் செய்து வந்ததால் மன உளைச்சல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரோனிஷாவிற்கு திருமணமாகி 4மாதங்களே ஆகிற காரணத்தால், இந்த தற்கொலை சம்பவம் குறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓவும் விசாரணை நடத்தி வருகின்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments