கொரோனா தொற்றின் 3வது அலை அச்சம் எதிரொலி.. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஒத்திவைப்பா.?

0 2404

கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை அச்சுறுத்தலால் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை உருவாகக்கூடும் என்ற அச்சத்தால் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது குறித்தும், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை புதுப்பிப்பது தொடர்பாகவும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்தப் பணியைத் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு முன்பாக நிர்வாகம் மற்றும் காவல் எல்லைகளை மாற்றி அமைக்க தடை விதிப்பது கட்டாயம் என்று கூறிய அதிகாரிகள், தற்போது ஜூன் மாதம் வரை அந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அக்டோபர் மாதத்துக்கு முன்பாக மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்காது என கருதப்படுகிறது என்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments