கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட மாணவி.. சக்கரங்களுக்கு இடையே சிக்கி படுகாயம்.!

0 2051

கிருஷ்ணகிரியில் ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற 12-ஆம் வகுப்பு மாணவி மீது பேருந்து ஏறி விபத்துக்குள்ளானதில், மாணவி படுகாயமடைந்தார்.

ஒசூர் அடுத்த சினிகிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமி, கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில், காலை வழக்கம்போல் அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்ற மாணவி, சினிகிரிப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதால், நகர்ந்து கொண்டிருந்த பேருந்திலிருந்து கீழே இறங்க முற்பட்டுள்ளார்.

அதில் நிலை தடுமாறி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி மாணவியின் கை மற்றும் கால் மீது பேருந்து ஏறி சென்றது. பலத்த காயங்களுடன் மாணவி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments