காஷ்மீரில் நீண்ட நாள் தேடப்பட்டு வந்த தீவிரவாதி பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொலை

0 2085

காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதி நீண்ட நாட்களாகத் தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவன் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் உள்ள ஹர்வான் என்ற இடத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில், வனப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதி திடீரெனத் தாக்குதல் நடத்தினான்.

இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியத் தீவிரவாதி சலீம் பார்ரே என்பவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதேபோல் காஷ்மீர் மண்டலத்திற்குட்பட்ட காசு கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மேலும் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments