ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட மாணவர் கீழே விழுந்து பலி ; ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

0 2983
ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட மாணவர்

கடலூரில் ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த நிலையில், ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் சாவடி பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்ற அந்த சிறுவன், பண்ருட்டியிலுள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். காலை வழக்கம்போல் அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்ற மாணவர், பக்கரி பாளையம் அருகேயுள்ள ரயில்வே கேட்டின் அருகே மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த பேருந்திலிருந்து கீழே இறங்க முற்பட்டுள்ளார்.

அதில் நிலை தடுமாறி பேருந்தின் சக்கரத்தில் சிக்கி அப்பாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். பக்கிரிபாளையம் நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்துவதே இல்லை என்றும் ரயில்வே கேட் அருகே மெதுவாகச் செல்லும்போது இறங்கிக் கொள்ளுமாறு ஓட்டுநரும் நடத்துநரும் கூறுகின்றனர் என்றும் கூறும் அப்பகுதி மக்கள், அவர்களின் அலட்சியத்தால்தான் விபத்து நேரிட்டது என்றும் குற்றம்சாட்டினர்.

இதனையடுத்து பேருந்தின் ஓட்டுநர் சக்திவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments