தஞ்சாவூரில் மீட்கப்பட்ட ரூ.500 கோடி மதிப்பிலான மரகதலிங்கம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

0 3171

தஞ்சாவூரில் மீட்கப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான மரகதலிங்கத்தை சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

நாகை மாவட்டம் திருக்குவளை தியாகராஜ சுவாமி கோவிலிருந்து 2016-ம் ஆண்டு காணாமல் போனதாக கூறப்படும் மரகத லிங்கம், தஞ்சாவூர் அருளானந்த நகர் பகுதியை சேர்ந்த ஒருவரின் வங்கி லாக்கரில் இருந்து மீட்கப்பட்டது.

இந்நிலையில், அந்த மரகத லிங்கத்தை சிலை திருட்டு தடுப்பு காவல் துறை கண்காணிப்பாளர் பொன்னி தலைமையிலான போலீசார், கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments