குடித்து விட்டு கார் ஓட்டி சென்று சாலையோரம் இருந்தவர்கள் மீது மோதி தப்பி ஓட முயன்ற நபரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

0 2058

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் நேற்று குடித்துவிட்டு தாறுமாறாக கார் ஓட்டிச்சென்று சாலையோரம் இருந்த 9 பேர் மீது இடித்துவிட்டு, பின் தப்பியோட முயன்ற நபரை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அந்த நபர் டெல்லியை சேர்ந்த 38 வயதுடைய அமித் பகுகனா என்பது தெரியவந்துள்ளது. மில்லிடாலில் 9 பேர் மீது மட்டுமல்லாமல் அந்த நபர் அங்கு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீதும் மோதிச்சென்றிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. படுகாயமடைந்த 9 பேரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments