வாகன சோதனைக்கு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை தாக்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பணி இடை நீக்கம்

0 3109
லாரி ஓட்டுநரை தாக்கிய எஸ்.எஸ்.ஐ.,செல்வராஜ் பணியிடை நீக்கம்

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வாகன சோதனைக்கு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுநரை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாக கூறப்படும் நிலையில், அவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சமயபுரம் பள்ளிவிடை பிரிவு அருகே எஸ்.எஸ்.ஐ செல்வராஜ் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, சென்னையில் இருந்து நாமக்கல் நோக்கி ட்ரெய்லர் லாரியை ஓட்டி வந்த டிரைவர், நிறுத்ததாமல் சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து லாரியை விரட்டிச் சென்று பிடித்த எஸ்.எஸ்.ஐ, லாரி டிரைவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் சிலர், லாரி டிரைவருக்கு ஆதராவாக, எஸ்.எஸ்.ஐ.யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படும் எஸ்.எஸ்.ஐ செல்வராஜை பணி இடை நீக்கம் செய்து திருச்சி எஸ்.பி சுஜித் குமார் உத்தரவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments