கோவையில் நள்ளிரவில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநில இளைஞர்கள் கைது

0 1689

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வட மாநில இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

ராக்கிப்பாளையம் பிரிவில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்திற்குள் மதுபோதையில் தள்ளாடியபடி நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், இயந்திரத்தின் கிழே உள்ள கதவை பிடித்து இழுத்து திறந்துள்ளனர். பின்னர் உள்ளே இருந்த டிஜிட்டல் லாக் கருவியை உடைத்த நிலையில், இயந்திரம் திறக்காததால் அங்கிருந்து சென்றுள்ளனர்.

ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள கருவி மூலம் இந்த தகவல் மும்பையில் உள்ள வங்கி அலுவலகத்துக்கு சென்றது. உடனடியாக வங்கி அதிகாரிகள் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அதே பகுதியில் சுற்றித்திரிந்த 2 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த, சந்திரசேகர் மற்றும் பிருந்தாவன் பாகரதி என்பது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments