சில்வர் நீர்வீழ்ச்சியை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் மீது வாகனம் மோதி விபத்து ; 10-க்கும் மேற்பட்டோர் காயம்

0 2170
சில்வர் நீர்வீழ்ச்சியை ரசிக்க வந்த சுற்றுலா பயணிகள் மீது வாகனம் மோதி விபத்து

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள Silver நீர்வீழ்ச்சியை ரசிப்பதற்காக நீர்வீழ்ச்சி பகுதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில், பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

கொடைக்கானலில் இருந்து வத்தலகுண்டு நோக்கி சென்ற மஹிந்திரா சைலோ கார், பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பயணிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments