புத்தாண்டின் முதல் வேலைநாளில் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றத்துடன் நிறைவு

0 1910
புத்தாண்டின் முதல் வேலைநாளில் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றத்துடன் நிறைவு

புத்தாண்டின் முதல் வேலைநாளில் இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்று தொடக்கம் முதலே முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கியதால் வணிகம் ஏற்றம் கண்டது.

நண்பகலிலும் பிற்பகலிலும் சந்தைகளில் வணிகம் மேலும் சூடுபிடித்தது. வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 929 புள்ளிகள் உயர்ந்து 59 ஆயிரத்து 183 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 272 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 626 ஆக இருந்தது. அரசுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஆறு விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments