ஆந்திர முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் சிலையை உடைக்க முயற்சி - இணையத்தில் வைரலான போதை ஆசாமியின் செயல்

0 1423

ஆந்திராவில் முன்னாள் முதலமைச்சர் என்டிஆரின் சிலையை போதை ஆசாமி ஒருவன் சம்மட்டியால் அடித்து உடைக்க முயற்சிக்கும் வீடியோ வைரலான நிலையில், அந்த நபர் கைது செய்யப்பட்டான்.

தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான என்.டி ராமராவின் சிலை ஒன்று குண்டூர் மாவட்டம் துர்க்கி பகுதியில் உள்ளது. இந்த சிலையை பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நேரத்தில் போதை ஆசாமி ஒருவன், சம்மட்டியால் அடித்து உடைக்க முயன்றுள்ளான்.

இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், தெலுங்கு தேசம் கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் இறங்கினர். இதனையடுத்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோட்டீஸ்வர ராவ் என்ற அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments