இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் சிறைக்காவல் நீட்டிப்பு.!

0 1439

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரின் சிறைக் காவலை ஜனவரி 5ஆம் நாள் வரை மன்னார் மாவட்ட நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

டிசம்பர் 19ஆம் நாள் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்துள்ளனர்.

மீனவர்களின் வழக்கு மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் மீனவர்களின் சிறைக்காவலை ஜனவரி 5 வரை நீட்டித்து உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments