பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி.!

0 4109

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இத்தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனா பாதிப்புள்ள ஒருவரை சந்திக்க நேரிட்டதாகவும், அறிகுறிகள் காரணமாக பரிசோதனை செய்து கொண்டதில், தனக்கும், மனைவி பிரியா ரன்ச்சலுக்கும் கொரோனா தொற்று உறுதியானதாகவும், இதைடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், நடிகர் ஜான் ஆபிரஹாம் தெரிவித்துள்ளார்.

மேலும், தாங்கள் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியிருப்பதால் லேசான பாதிப்புகள் இருப்பதாகவும், அனைவரும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கொரொனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியமாக இருங்கள் என்றும், அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வீட்டில் செல்லப் பிராணிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உலக வங்கியில் பணியாற்றிய பிரியா ரன்ச்சலை கடந்த 2014-ம் ஆண்டு, ஜான் ஆபிரஹாம் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments