ஆந்திராவில் பொங்கல் திருவிழாவையொட்டி எருதுவிடும் போட்டி.. மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணை முட்டி வீசிய மாடு.!

0 2717

பொங்கல் திருவிழாவையொட்டி ஆந்திராவில் சித்தூர் அருகே நடைபெற்ற எருதுவிடும் போட்டியில், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, காளைகளை அடக்க முயன்றனர்.

ஆண்டுதோறும் பொங்கல் சமயத்தில், சித்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில், ஜல்லிக்கட்டு என்ற பெயரில் எருதுவிடும் பந்தயங்கள் நடைபெறும். அந்த வகையில் சேனம்பட்லா கிராமத்தில் நடைபெற்ற போட்டியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டு மாடுகளை பிடித்து, அவற்றின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பரிசு பொருட்களை எடுத்துச் சென்றனர்.

சேனம்பட்லா கிராமத்தில் தெருக்களிலேயே மாடு பிடிக்கும் போட்டி நடைபெற்ற நிலையில், அவ்வழியாக, மோட்டார் சைக்கிளின் வந்த தம்பதியரை, பாய்ந்து வந்த ஜல்லிக்கட்டு மாடு முட்டியது. இதில், வாகனத்தில் வந்த பெண் தூக்கி வீசப்பட்டார்.

போட்டியில் பங்கேற்றவர்களில் 10-க்கும் மேற்பட்டோர் மாடு முட்டியதில் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments