பெற்றோருடன் தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்.. 2ஆவது நாளாக தேடும் பணி தீவிரம்.!

சென்னை அடுத்த மதுரவாயல் அடையாளம்பட்டு கூவம் தரைப்பாலத்தில் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட 13 வயது சிறுவனை 2வது நாளாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.
அயனம்பாக்கத்தைச் சேர்ந்த வேணுகோபால், அவரது மனைவி மற்றும் இரு மகன்களுடன் நேற்று பைக்கில் உறவினர் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது அடையாளம்பட்டு கூவம் தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்து செல்வதை பொருட்படுத்தாமல் அவர்கள் தரைப்பாலத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அதில், அவர்களது இருசக்கர வாகனம் தண்ணீரில் சிக்கிக்கொண்ட நிலையில் வேணுகோபாலின் மூத்த மகன் 13 வயதான குமரேசன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான்.
கூவம் தரைப்பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் போலீசார் இருபுறமும் தடுப்புகள் அமைத்திருந்த போதும் அதனை மீறி தரைப்பாலத்தை கடக்க முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் இரண்டு குழுக்களாக பிரிந்து ரப்பர் படகு மூலம் சிறுவனை தேடி வருகின்றனர்.
Comments