அரையாண்டு விடுமுறைக்கு பிறகு 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு

0 3199

தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறைக்குப் பின்பு, 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் பரவல் காரணமாக, மழலையர் மற்றும் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு, பள்ளிகளின் வாயிலாக நேரடி பாடங்களை நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

மாணவர்கள் முகக்கவசம் அணிதல், பள்ளிக்கு வரும்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் மற்றும் சமூக இடைவெளி ஆகிய கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றி, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன.

இதனிடையே, மத்திய அரசின் சார்பில் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் முகாம் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments