செங்கல்பட்டில் கணவனை இழந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை.! தப்பி ஓடிய ஆண் நண்பருக்கு போலீசார் வலைவீச்சு.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கணவனை இழந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ஆண் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேளம்பாக்கத்தில் வசித்து வரும் சயின்ஷா என்பவர் ஏற்கனவே இரு கணவர்களை இழந்தவர். இந்நிலையில் அவருக்கு பாலவாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் வாய்தராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கார்த்திக், சயின்ஷாவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சாயின்ஷாவின் மகன் அளித்த தகவலில் பேரில் கேளம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments