நாட்டில் 33 ஆயிரத்தைத் தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு.!
இந்தியாவில் புதிதாக 33 ஆயிரத்து 750 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
ஒமைக்ரான் தொற்று பரவலை தொடர்ந்து இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 846 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பதுடன் நாடு முழுவதும் 1 லட்சத்து 45 ஆயிரத்து 582 பேர் சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டிப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 700 ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments