ஓசூரில் கத்தியால் குத்தி சிவில் இன்ஜினியரை கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது.!

0 2306

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட பகையால் இன்ஜினியரை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6பேர் கைது செய்யப்பட்டனர்.

சொப்பட்டியைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் மோகன்பாபு கடந்த 26ஆம் தேதி அன்று அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் அங்குள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி உள்ளார்.

அப்போது அவர்களுக்குள் கடும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை மனதில் கொண்ட அந்த இளைஞர்கள் நேற்று முன்தினம் இரவு  மோகன்பாபுவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் மோகன்பாபுவை கத்தியால் குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில்  உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments