பஞ்சாப் மாநில அரசு தனக்கு அரசு வேலை தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக மாற்றுத் திறனாளி வீராங்கனை புகார்.!

0 2066

பஞ்சாப் மாநில அரசு தனக்கு அரசு வேலை தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக மாற்றுத் திறனாளி வீராங்கனை தெரிவித்துள்ளார்.

ஜலந்தரைச் சேர்ந்த மலிகா ஹண்டா என்ற செஸ் வீராங்கனை காது கேளாத மற்றும் வாய் பேசமுடியாதவர்.தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தனக்கு ரொக்க வெகுமதியை அறிவித்திருந்ததாகவும், கொரோனா பரவல் காரணமாக அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் பர்கத் சிங்கைச் சந்தித்ததாகவும், காது கேளாதோர் விளையாட்டுகளுக்கான கொள்கை இல்லாததால், மாநில அரசால் வேலை வழங்க முடியாது என்று தெரிவித்ததால் தான் ஏமாற்றமடைந்ததாகவும் மலிகா ஹண்டா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments